இஸ்ரேல் நடத்தும் வான்வழி தாக்குதலால் 1.80 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர்களில் 1.37 லட்சம் பேர் ஐ.நா. நடத்தும் 83 பள்ளி முகாம்களில் தஞ்சம் என தகவல் வெளியாகியுள்ளது.
காசா மீது தொடர்ந்து வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது என்றும், நேற்று இரவில் காசாவில் உள்ள 200 நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் காசாவின் நாடாளுமன்றத்தில் இருந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தினால், அரசு கட்டடங்கள் ராணுவ இலக்காகும் என்றும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் போதிய நேரமில்லாததால் இலக்கைக் குறி வைக்கும் முன்பாக எச்சரிக்கை விடுப்பது சந்தேகமே என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதாகவும் தற்போதைய நிலவரம் குறித்து அதன் நெதன்யாகு பிரதமர் மோடியுடன் விளக்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும் அனைத்து வகை தீவிரவாதத்தையும் இந்தியா எதிர்ப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.