போரை நாங்க தொடங்கல.. ஆனா நாங்கதான் முடிப்போம்! – இஸ்ரேல் பிரதமர் சூளுரை!

செவ்வாய், 10 அக்டோபர் 2023 (09:04 IST)
இஸ்ரவேலை தாக்கி ஹமாஸ் குழு மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.



இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் பாலஸ்தீனிய ஆதரவு அமைப்பான ஹமாஸ் குழு சமீபத்தில் இஸ்ரேல் மேல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பதிலுக்கு இஸ்ரேலும் அதிரடி தாக்குதலில் இறங்கியுள்ள நிலையில் இஸ்ரேலில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

நேற்று காஸாமுனை எல்லைப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 700 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஹமாஸ் குழுவிற்கு ஆதரவாக ஈரான், அரபு நாடுகளும் இறங்கியுள்ளனர்.

இஸ்ரேலின் பதிலடி தாக்குதலுக்கு பிறகு பேசிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு “போரை நாங்கள் தொடங்கவில்லை ஆனால் நாங்கள் தான் இந்தப் போரை முடித்து வைப்போம். போரை நாங்கள் விரும்புவதில்லை. ஆனால் போரை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எங்களை தாக்கியதன் மூலம் ஹமாஸ் படையினர் மிகப்பெரும் வரலாற்று தவறை செய்து விட்டார்கள். அதற்கான விலையை அவர்கள் பெறுவார்கள்“ என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்