பத்திரிக்கையாளரின் குடும்பத்தை கொன்ற இஸ்ரேல்! – காசாவில் சோகம்!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (12:30 IST)
காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதலில் அல்ஜஸீரா பத்திரிக்கையாளரின் மொத்த குடும்பமும் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைவிடமான காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேசமயம் அந்த பகுதியை சேர்ந்த பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பாக வெளியேறவும் இஸ்ரேல் எச்சரித்து வருகிறது. ஆனால் பாதுகாப்பான இடம் என இஸ்ரேல் ஒரு பகுதியை அறிவித்து மக்களை அங்கே செல்ல சொல்லிவிட்டு பின்னர் அதே பகுதியில் குண்டுகளை வீசி தாக்குவது பெரும் சர்ச்சையையும், உலக நாடுகளின் கண்டனத்தையும் பெற்றுள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் பல ஊடகங்களும் இஸ்ரேல் தரப்பு செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் பாலஸ்தீன் பக்க பாதிப்புகளை தொடர்ந்து வெளிக்கொண்டு வரும் அல்ஜஸீரா ஊடகத்தின் அரபிக் செய்தி பிரிவின் தலைமை செய்தியாளராக இருந்து வருபவர் வைல் டாடௌ. இவரது மனைவி, மகன், பேர குழந்தைகள் என எல்லாரும் காசாவில் இருந்த நிலையில், சமீபத்தில் இஸ்ரேல் “காசாவின் தெற்கு பகுதிதான் பாதுகாப்பானது. அங்கு தாக்குதல் நடக்காது. அனைவரும் அங்கே செல்லுங்கள்” என அறிவித்ததன்படி அங்கு சென்றுள்ளனர். ஆனால் இஸ்ரேல் அங்கு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் ஏராளமான பாலஸ்தீனிய மக்களுடன் வைல் டாடௌவின் மொத்த குடும்பமும் பரிதாபமாக பலியாகியுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு அல்ஜஸீரா உள்ளிட்ட பல ஊடகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்