இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த 7ம் தேதி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பின் பதுங்கு தளமான காஸா முனை மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. அதேசமயம் காஸாவிலிருந்து வெளியேறும் மக்கள் மீது குண்டுகளை வீசியதாகவும், அங்குள்ள மருத்துவமனை தேவாலயங்கள் மீது குண்டு வீசியதாகவும், இஸ்ரேல் மீது புகார்களும் எழுந்துள்ளது.
இது குறித்து பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு படை தலைவர் ஹர்ஜி ஹலோவி “நான் ஒன்றை தெளிவாக கூற விரும்புகிறேன். படையெடுப்பை மேற்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம். கடந்து போகும் ஒவ்வொரு நிமிடங்களுக்கும் எதிரிகளை நாங்கள் கூடுதலாகவே தாக்குவோம். பயங்கரவாத அமைப்பான ஹமாசையும் அவர்களுடைய தளபதிகளையும் நாங்கள் கொல்வோம். இஸ்ரேலின் படையெடுப்பு எப்போது நடக்கும் என பயங்கரவாத அமைப்பு காத்திருக்கும் போது அது அவர்களுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும்“ என்று கூறியுள்ளார். முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அம்மாசை அளிப்பது மட்டுமே தங்கள் நோக்கம் என்று பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.