ஏற்கெனவே 2 அமெரிக்க பெண்களை விடுத்த ஹமாஸ், தற்போது இரண்டு வயதான இஸ்ரேலிய பெண்களை விடுவித்துள்ளது. எகிப்து மற்றும் கத்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் அடுத்தடுத்து பணயக்கைதிகள் விடுவிக்கபட்டு வருகின்றனர்.
பேச்சு வார்த்தையின் அடிப்படையில், மனிதாபமான அடிப்படையில் தான் பெண் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் போரில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.