உலக வங்கியின் புதிய தலைவர் பதவிக்கு இந்தியரா...?

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (19:21 IST)
தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர் இந்திராநூயி ஆவார். மிகச்சிறந்த ஆளுமையாளரான இவர் பெப்ஸி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக, 12 ஆண்டுகள் பதவி வகித்து பலநூறு கோடிகளை சம்பளமாக பெற்றவர்.
தற்போது உலக வங்கியின் தலைவராக ஜிம்யாம்கிம் இருக்கிறார். அவர் இம்மாத இறுதியில் ஓய்வு பெறப்போகிறார். இதனையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
 
அநேகமாக உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திரா நூயி தேர்ந்தெடுக்கப்படலாம் என செய்திகள் பரவி வருகின்றன.
 
இந்திரா உலக வங்கியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவுக்கு தானே பெருமை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்