விஜய் ஆண்டனியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

வியாழன், 17 ஜனவரி 2019 (19:02 IST)
இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, 'நான்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி அதன்பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்த நிலையில் சற்றுமுன் அவர் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனியின் புதிய படத்திற்கு 'தமிழரசன்' என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டு இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கி வருகிறார். இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் அனல் அரசு ஸ்டண்ட் இயக்கத்தில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

இன்று வெளியாகியுள்ள 'தமிழரசன்' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் ஆண்டனி கையில் துப்பாக்கியும் கண்களில் வெறியும் கொண்டிருப்பதால் இதுவொரு அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy to work with Ilayaraja sir & SNS MOVIES Siva sir in BABU Yogeeswaran’s directorial #Thamilarasan

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்