திடீரென ஆடையை களைந்து போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவி.. கைது செய்த போலீசார்..!

Siva
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (08:57 IST)
ஈரான் நாட்டில், கல்லூரி மாணவி ஒருவர் திடீரென தனது ஆடைகளை களைந்து போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, அந்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் நாட்டில் பெண்களுக்கு கடுமையான உடை கட்டுப்பாடு இருக்கும் நிலையில், அவற்றை எதிர்த்து போராட முடிவு செய்த கல்லூரி மாணவி ஒருவர் திடீரென தனது ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் போராட்டம் செய்தார்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில், அந்த மாணவியை பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு, ஹிஜாப் அணியவில்லை என்பதால் 22 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டு, அவர் போலீஸ் காவலில் இருந்தபோது மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதனை அடுத்து, அந்நாட்டில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஈரானின் கடுமையான இஸ்லாமிய ஆடை கட்டுப்பாட்டை எதிர்க்கும் விதமாகதான் ஆடைகளை களைந்து போராடினேன் என்று கல்லூரி மாணவி கூறிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், மனநிலை பிரச்சனை காரணமாகதான் அவர் ஆடைகளை களைந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்