இஸ்ரேல் - ஈரான் போரால் கச்சா எண்ணெய் பற்றாக்குறையா? மத்திய அரசு விளக்கம்..!

Siva

செவ்வாய், 8 அக்டோபர் 2024 (12:02 IST)
இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால், விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்கையில், "இந்தியாவைப் பொறுத்தவரை, கச்சா எண்ணெயை 39 நிறுவனங்கள் மூலம் வாங்குகிறோம். முன்னர் 27 நிறுவனங்களிடமே பெற்று வந்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

"சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தேவையை விட அதிகமாக கிடைக்கிறது. உலக சந்தையில் புதிய நிறுவனங்கள் நுழைந்துள்ளன. சர்வதேச அளவில் எங்கும் கச்சா எண்ணெய் பற்றாக்குறை இல்லை. கச்சா எண்ணெய் இறக்குமதியில், ரஷ்யாவிடமிருந்து 44% பெற்று வருகிறோம்" எனவும், "எனவே, இந்தியாவை பொருத்தவரை கச்சா எண்ணெய் பற்றாக்குறை இருக்காது" என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்