பாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய சிறுவர்கள்..

Arun Prasath
புதன், 29 ஜனவரி 2020 (12:28 IST)
பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் ஒன்றை சேதப்படுத்தியது தொடர்பாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் சாக்ரோ பகுதியில் அமைந்துள்ளது மாதா தேவல் பிட்டானி என்று அழைக்கப்படும் ஹிந்து ஆலயம். இதில் பாகிஸ்தானில் சிறுபான்மையினராக வாழும் ஹிந்துக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அக்கோவில் உண்டியலில் உள்ள பணத்தை திருடுவதற்காக நான்கு சிறுவர்கள் கோவிலை சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக 12 முதல் 15 வயதுக்குள்ளான 4 சிறுவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் மீது தெய்வ நிந்தனை செய்ததாக கூறி கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி சிந்து மாகாண சிறுபான்மைத்துறை அமைச்சர் அரிராம் லால் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர், “அமைதிக்கு பெயர் போன சாக்ரோ நகரத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்த மத கலவரத்தை தூண்டும் முயற்சியில் சமூக விரோதிகள் உள்ளனர்” என குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்