பிரேசிலில் கனமழை மற்றும் நிலசரிவு- 23 பேர் பலி

sinoj
திங்கள், 25 மார்ச் 2024 (19:01 IST)
பிரேசில் நாட்டில்  பெய்த கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் தென்கிழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.
 
இதனால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதேசமயம் நிலச்சரிவுகளும்  ஏற்பட்டுள்ளதால்  அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், வீடுகளை சுற்றி வெள்ள  நீர் தேங்கியுள்ளதால், மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். ஆறுகளிலும் வெள்ளம் வழிந்தோடுகிறது எனவே கரையோகப் பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
குறிப்பாக அந்த நாட்டின் எஸ்பிரித்தா சாண்டோ மற்றும் ரியோ டி ஜெனிரோ ஆகிய மாகாணங்களில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்