ஹவாய் தீவில் காட்டுத் தீ ...பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2023 (20:52 IST)
அமெரிக்க நாட்டில் உள்ள  ஹவாய் தீவில் காட்டுத் தீ பரவி வரும்  நிலையில், பலி எண்ணிக்கை  உயர்ந்துள்ளது.
 

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி  நடந்து வருகிறது. இங்குள்ள ஹவாய் தீவு அருகேயுள்ள மவுய் தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுத் தீ ஏற்பட்டது.

இந்தத் தீ அங்குள்ள  நகருக்குள் பரவியது. இதில், அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் எரிந்து சேதம் அடைந்தன. பலர் கடலில் குதித்து உயிர்தப்பினர்.

இந்த தீயில் சிக்கி  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தினால் பலர் வீடுகள், உறவினர்களை இழந்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்