தன்னை தூக்கி வளர்த்த பெண்ணை தூக்கி வீசிய கொரில்லா! – ஸ்பெயினில் சோக சம்பவம்!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (17:02 IST)
ஸ்பெயினில் உயிரியல் பூங்கா ஒன்றில் பல ஆண்டுகளாக தன்னை வளர்த்த பெண்ணை கொரில்லா ஒன்று தாக்கி கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பயின் நகரம் மாட்ரிட்டில் உள்ள பிரபல உயிரியல் பூங்காவில் மலோபா என்னும் கொரில்லா வகை குரங்கு வளர்க்கப்பட்டு வருகிறது. மலோபா குட்டியாக இருந்ததிலிருந்து கடந்த 29 ஆண்டுகளாக அதை பேணி, பராமரித்து வளர்த்து வருகிறார் அந்த பூங்காவில் பணிபுரியும் பெண் பயிற்சியாளர் ஒருவர்.

இந்நிலையில் அந்த பெண் பயிற்சியாளர் மலோபாவுக்கு வழக்கம்போல காலை உணவு கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து அந்த பெண்ணின் மீது பாய்ந்த மலோபா அந்த பெண்ணை சரமாரியாக கடித்து குதறியுள்ளது. இதனால் பெண்ணின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டதுடன் முதுகு தண்டும் உடைந்துள்ளது. இதை கண்ட பூங்கா பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக மயக்க ஊசியை மலோபா மீது செலுத்தி அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்