3.33 கோடி ஆனது உலக கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 60.70 லட்சம்!

திங்கள், 28 செப்டம்பர் 2020 (06:44 IST)
உலகில் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்திற்கே சவால் விடுத்துள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 33,302,896 என அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உலக அளவில் 1,002,350 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் 24,633,613 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,321,343 என அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 209,453 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 4,560,456 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,073,348 என அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் இந்தியாவில் 95,574பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 5,013,367 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பிரேசில் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,732,309 என அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பிரேசிலில் 141,776 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 4,060,088 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் ரஷ்யா, கொலம்பியா, பெரு, ஸ்பெயின், மெக்சிகோ, அர்ஜெண்டினா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் கொரோனா பாதிப்பில் உள்ள முதல் பத்து நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்