அமெரிக்காவில் மாரத்தான் பந்தயத்தை நேரடி ஒளிபரப்பில் பேசிக் கொண்டிருந்த பெண்ணை அமைச்சர் பின்னால் தட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்ட மிகப்பெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. அந்த நிகழ்வை தனியார் செய்தி சேனலின் பெண் ரிப்போர்ட்டர் நேரடி ஒளிபரப்பில் தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் ஓடிய ஆசாமி ஒருவர் பெண் ரிப்போர்ட்டரின் பின்பக்கம் தட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் செய்தியாளர் நேரடி ஒளிபரப்பு போய்க் கொண்டிருந்ததான் சுதாரித்து கொண்டு மீண்டும் பேச தொடங்கினார்.
பெண் ரிப்போர்ட்டர் நேரலையில் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னால் தட்டியது யார் என சமூக வலைதளங்களில் தேடியபோது அவர் ஜார்ஜியா மாகாண இளைஞர் நலத்துறை அமைச்சர் டாமி கால்வே என்பது தெரியவந்துள்ளது. அமைச்சரே இப்படி தகாத முறையில் நடந்து கொண்டது ஜார்ஜியா மாகாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பொதுமக்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளதாக கூறப்படுகிறது.