உலகின் டாப் பணக்கார நிறுவனங்களின் பட்டியலில் அராம்கோ நிறுவனமும் இணைந்துள்ளது. சவுதி அரசால் நிர்வகிக்கப்படும் இந்த நிறுவனம் பெட்ரோலியம் மற்றும் எரிப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. சவுதி அரேபிய பங்கு சந்தையில் நேற்று வரை 8 சதவீதம் உயர்வு கண்டிருந்த அராம்கோ பங்கு மதிப்பு இன்று 10 சதவீதமாக உயர்ந்தது. இந்நிறுவனத்தின் 1.5% பங்கு மட்டுமே பங்கு சந்தையில் ஏலம் விடப்பட்டது. அதுவும் சவுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
மேலும் அமேசான், ஃபேஸ்புக், வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் சந்தை மதிப்பை இணைத்தாலும் அது அராம்கோவின் மதிப்பு ஈடாகாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நிறுவனம் ஒரு நாட்டின் ஜிடிபி மதிப்பை விட அதிகமாக சந்தை மதிப்பு கொண்டிருப்பது உலக வர்த்தக சந்தையையே வாய்பிளக்க வைத்துள்ளது.