அதிபரா இருந்தாலும் சட்டம் ஒன்னுதான்..! ஜோ பைடன் வீட்டில் எஃப்.பி.ஐ சோதனை!

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (08:54 IST)
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வீட்டில் அரசின் ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்திருந்த விவகராம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் அதிபராக தற்போது இருந்து வருபவர் ஜோ பைடன். அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பு கடந்த 2009 முதல் 2016 வரை அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகவும் ஜோ பைடன் பதவி வகித்திருந்தார்.

அந்த சமயத்தில் உள்ள அரசின் ரகசிய ஆவணங்களை திருடி தனது வீட்டில் வைத்திருந்ததாக ஜோ பைடன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ள எஃப்.பி.ஐ அமைப்பு அதிபர் ஜோ பைடனின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையில் பல ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவற்றை பதுக்கி வைத்திருந்தது குறித்து ஜோ பைடனிடம் விரைவில் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்