அதன்படி அவர்களது திருமணம் எளிய முறையில் வெள்ளை மாளிகையில் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் என சுமார் 250 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதற்கு முன்னர் அமெரிக்க அதிபராக இருப்பவரின் மகன், மகள் போன்றவர்களுக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்துள்ளது. ஆனால் அதிபரின் பேத்தி ஒருவருக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் நடப்பது இதுவே முதல்முறை என செய்திகள் வெளியாகியுள்ளது.