அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தனக்கு பிடித்த இடம் தாஜ்மஹால் என எலான் மஸ்க் கூறிய உள்ள நிலையில் எலான் மஸ்க் அடுத்ததாக தாஜ்மஹாலை வாங்கப்போகிறாரா என நெட்டிசன்கள் கிண்டலடித்தனர் . பிரபல தொழிலதிபர்கள் எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்ததாகவும் அப்போது தாஜ்மகாலை பார்த்தபோது ஆச்சரியம் அடைந்ததாக உண்மையிலேயே தாஜ்மஹால் தான் உலக அதிசயம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மஸ்க்கின் தாயார் மேயி மஸ்க் இந்த தகவல் தவறானது என்று கூறி நாம் தாஜ்மஹால் சென்றது 2007 ஆம் ஆண்டு அல்ல. 2011 ஆம் ஆண்டு. எங்கே டிவிட்டரின் எடிட் பட்டன்” எனக் கேட்டு ஜாலியாகக் கலாய்க்க அது டிவிட்டரில் வைரலாகி வருகிறது.