கட்டண இணையதளமாகிறது டுவிட்டர்: பயனர்கள் அதிர்ச்சி

புதன், 4 மே 2022 (11:55 IST)
சமீபத்தில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் இணைய தள பக்கத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து விலைக்கு வாங்கினார் என்பது தெரிந்ததே
 
 இதனை அடுத்து டுவிட்டரில் அவர் பல மாற்றங்களை செய்ய இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென அரசு சார்ந்த ட்விட்டர் பக்கங்கள் மற்றும் கமர்சியல் ரீதியான டுவிட்டர் பக்கங்களுக்கு கட்டணம் வசூலிக்க இருப்பதாக எலான் மஸ்க் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் சாதாரண பயனர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்று அறிவித்திருப்பது சற்று நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு சார்ந்த ட்விட்டர் பக்கங்கள் மற்றும் கமர்சியல் ரீதியான டுவிட்டர் பக்கங்களுக்கு கட்டணம் எவ்வளவு என்பதை அவர் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்