டுவிட்டர் பங்குகளை வாங்கினார் எலான் மஸ்க்!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (07:30 IST)
7.35 கோடி டுவிட்டர் பங்குகளை வாங்கினார் எலான் மஸ்க்
உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரின்  9.2 சதவீத பங்குகளை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
அவர் மொத்தம் 7.35 கோடி டுவிட்டர்  பங்குகளை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
டுவிட்டரில் எலான் மஸ்க் முதலீடு செய்து உள்ளார் என்ற செய்தி பரவியதும் டுவிட்டரின் பங்கு சந்தை விலை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
எலான் மஸ்க் குறித்து டுவிட்டரில் பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தன்னை விமர்சனம் செய்த நிறுவனத்தின் பங்குகளை எலான் மஸ்க் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்