ஹெலிகாப்டரிலிருந்து தீய சக்திகளை விரட்டும் பாதிரியார்

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (18:55 IST)
கொலம்பியா நாட்டில்,வானில் இருந்து புனித நீர் தெளித்து தீய சக்திகளை விரட்ட, பாதிரியாருக்கு, அந்நாட்டு ராணுவம், ஹெலிகாப்டர் வழங்கி உதவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலம்பியாவில் ப்யூனாவென்ட்சுரா எனும் மாநகராட்சியில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 51 கொலைகள் நடந்திருக்கின்றன.

இதனையடுத்து ப்யூனாவென்ட்சுரா நகரை, அந்நாட்டினர் துர்திஷ்டவசமான ஊர் என்று அழைக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் ப்யூனாவென்ட்சுரா நகரில் உள்ள ரூபன் டாரியொ ஜராமில்லோ மோடோயா என்ற பாதிரியார், ப்யூனாவெண்ட்சுரா நகரை பேய் பிடித்திருக்கிறது எனவும், எனவே தாம் வான்பரப்பிலிருந்து புனித நீர் தெளித்து தீய சக்திகளை விரட்ட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் பாதிரியார், அவ்வாறு வானில் இருந்து புனித நீரை தெளிக்கும்போது, கடவுளின் ஆசி கிடைக்கும் எனவும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் பாதிரியாரின் கோரிக்கைக்கு கொலம்பியா ராணுவம், வானத்திலிருந்து நீர் தெளிக்க ஹெலிகாப்டரை வழங்கவிருப்பதாக கூறியிருக்கிறது.

இச்செய்தி சமூக வலத்தளங்களில் பலரால் கேலி செய்யப்பட்டாலும், கொலம்பியாவின் ப்யூனாவென்ட்சுரா நகரைச் சேர்ந்த மக்கள் பாதிரியாரின் மேல் பெரும் நம்பிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்