அமெரிக்க அரசின் கட்டுப்பாடுகளை மீறிய அதிபர் மகள்

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (15:11 IST)
சீனாவில் இருந்து உலகநாடுகளில் பரவி வருகிற கொரொனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த நாடுகள் பின்பற்றி வருகின்றன.

இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டிருக்கும் விதியை மீறி அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவான்கா, தனது குடும்பத்தினருடன் சென்று சொகுசு விடுதிக்குச் சென்று விடுதிக்குச் சென்றுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நாள்தோறும் கொரோனாவால் மக்கள் பலி எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இதனையடுத்து கடந்த 1 ஆம் தேதிமுதல் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதிபர் மகள் இவான்கா தனது கணவர் ஜாரெட் குஷ்னரும் தங்களின் 3 குழந்தைகளுடன் நியுஜெர்சி மாகாணத்திலுள்ள ஒரு சொகுசு விடுதிக்குச் சென்று பாஸ்கா இரவை கொண்டாடியதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்