அமெரிக்காவில் 1,23,426 பேருக்கு கொரோனா பாதிப்பு ...2,211 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 29 மார்ச் 2020 (13:15 IST)
கொரோனா வைரஸால் உலகில் 660706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 139 415 பேர் குணமடைந்துள்ளனர். 30652 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடாக  அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

நேற்று முன் தினம் மட்டும் 18 000 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. அங்கு மொத்தமாக பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியுள்ளது.
மேலும், ஒரே நாளில் 401 பேரில் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி அங்கு, 123426 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்., மொத்த பலி எண்ணிக்கை 2,211 ஆக உள்ளது. நியூயார்க்கில் 50 ஆயிரம் பேர் பாதிக்கபட்டு, 450 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,நிலைமைச் சமாளிக்க அதிபர் டிரம்ப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளார்.

போர்காலங்களில் பயன்படுத்தும் சட்டமான பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை பயன்படுத்தி, கொரோனா  சிகிச்சைக்கு அவசிய தேவையான வென்டிலேட்டர்களை விரைந்து தயாரிக்க நாட்டின் மிகப்பெரிய மோட்டார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்சுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஒரு லட்சம் வெண்டிலேட்டர்களை நட்பு நாடுகளுக்கு வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்