அமெரிக்காவில் உளவு பார்த்ததாக சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு பலூன் பல நாடுகளை உளவு பார்த்ததாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மவுண்டானா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் உள்ள அணு ஆயுத ஏவுதளம் அருகே மர்ம பலூன் ஒன்று பறந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பலூனின் இயக்கத்தை கண்காணித்த அமெரிக்கா அது கடல் பகுதியை அடைந்ததும் சுட்டு வீழ்த்தியது.
சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனின் பாகங்களை கொண்டு அமெரிக்கா ஆய்வு மேற்கொண்டு வருகிறது. உளவு வேலைக்காக சீனா இந்த உளவு பலூனை அமெரிக்கா மீது பறக்கவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அது வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பலூன் தான் என சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் தென்சீன கடல்பகுதியில் ஹைனன் மாகாணத்தில் இருந்து இயக்கப்பட்ட இந்த உளவு பலூன் 5 கண்டங்கள் வழியாக பயணித்து ஜப்பான், கொரியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் வேவு பார்த்திருக்கலாம் என அமெரிக்க ராணுவம் சந்தேகத்தில் உள்ளது. இந்த சீன பலூன் விவகாரம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.