சீனாவில் கொரோனா ருத்ர தாண்டவம் – பல பகுதிகளில் கடும் ஊரடங்கு!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (14:33 IST)
கொரோனா பரவலை தடுக்க சினாவில் மீண்டும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதிக்கத்தொடங்கி உள்ளது. 

 
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கான மக்களை பாதித்தது பல லட்சம் மக்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் முழு முடக்கத்தால் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்தன.
 
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள், தடுப்பூசி என எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பல நாடுகளில் கொரோனா குறைந்து வருகிறது. இந்தியாவிலும் வெகுவாக கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளது. தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. 
 
இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க சினாவில் மீண்டும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதிக்கத்தொடங்கி உள்ளது. ஏற்கனவே பல இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஷாங்காய் உள்பட பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
 
இதையொட்டி கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அங்குள்ள கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டு உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்