கொரோனோ வைரஸ் எதிரொலி – சீனாவில் திருமணங்கள் ரத்து !

Webdunia
ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (08:02 IST)
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தி வருவதால் சீன அரசு திருமண நிகழ்ச்சிகளை ரத்து செய்ய சொல்லி அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் உலக நாடுகள் பலவற்றிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் பல நாடுகள் தங்கள் நாட்டில் வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவரையில் இந்நோய் பாதிப்பால் 259 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நோய் பரவலைத் தடுக்க மற்ற நாடுகள் சீனாவுக்கு விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். மேலும் இன்று நடக்க இருந்த திருமணங்களை ரத்து செய்ய சொல்லி சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் அதிகமாக ஓரிடத்தில் கூடினால் நோய் பரவும் சாத்தியம் அதிகமாக இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் நிகழ்வுகளையும் உடனடியாக செய்ய சொல்லி வற்புறுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்