இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள ஹுபே மாகாணத்திலிருந்து 324 இந்தியர்கள், ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதில் 211 மாணவர்களும் அடங்குவர். இவர்களுக்காக, ஹரியாணா மாநிலம், மானேசரில் தனி மருத்துவ முகாமை ராணுவம் அமைத்துள்ளது.
இதேபோல், கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவா்களை தனியாக வைத்து, அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக ஐடிபிபி (இந்தோ-திபெத் எல்லை காவல் படை) சார்பில் தில்லியில் 600 படுக்கைகளுடன் தனி மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டு எட்டு மாதம் சர்வதேச அளவில் பல நாடுகளை வாட்டிவதைத்த சார்ஸ் 8,100 பேரை தாக்கியது. இப்போது வரை கொரோனோ வைரஸ் 10,000 பேரை தாக்கி உள்ளது.