இன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமான், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, சுமார் இரண்டரை நேரமாக உரையாற்றினார். இது வரலாற்றில் நீண்ட நேர உரையாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது ;
இன்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள மூன்று கொள்கைகள், 16 திட்டங்கள் என்ற நிதி நிலை அறிக்கை என்பது கவர்ச்சி வாசகங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
மேலும் , மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை ; திட்டங்களும் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது :
அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.