பனிப் பள்ளத்தில் விழுந்த குழந்தை... பரவலாகும் வீடியோ

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (17:59 IST)
வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் ஒரு பனிப் பகுதிக்குச் சுற்றுலாச் சென்றிருந்தார். அங்கு அவரது குழந்தை பனிப்பள்ளத்தில் விழுந்தது போன்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது.
வெளிநாட்டில் வசித்து வந்த ஒரு தம்பதியர் தனது குடும்பத்துடன் பனி சூழ்ந்த பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர்.
 
அங்கு பெற்றோர் இருவரும் ஒருபுறம் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது, இன்னொரு புறம் அவர்களது கைக் குழந்தை, அங்கு தனியாக விளையாடிக் கொண்டிருந்தது.
 
அப்போது, பெற்றோரிம் கவனம் குழந்தை மீது இல்லாததால், குழந்தை பனியின் மீது நடக்கும்போது, அங்குள்ள பனிப் பள்ளத்தில் தவறி கிழே விழுந்தது.
 
அப்போது, உடனடியாக குழந்தையின் அழுகுரல் கேட்டு குழந்தையை தூக்கிவிட்டனர். நல்லவேளையாக அந்த இடம் ஆழமாக இல்லாததால் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை.  தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்