எனக்கு ரஷ்ய மக்களை பிடிக்கும்… ஆனா போர் வந்துட்டா..! – அர்னால்ட் வெளியிட்ட வீடியோ!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (08:52 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் போரை நிறுத்த கோரி ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 25 நாட்கள் நெருங்கியுள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலால் இரு தரப்பினரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “உலகில் நடக்கும் பல உண்மை சம்பவங்கள்  உங்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயங்கரமான விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன. ரஷியா தான் இந்த  இந்தப் போரைத் தொடங்கியது. இது ரஷிய மக்களின் போர் அல்ல. இந்தப் போரைத் நீங்கள் தான் தொடங்கினீர்கள். நீங்கள் இந்தப் போரை முன் எடுத்து செல்கிறீர்கள். நீங்கள் நினைத்தால் இந்தப் போரை உங்களால் நிறுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்