பிரியங்காவும் இருக்காங்க… ஐஸும் இருக்காங்க- தலைவர் 169 பட அப்டேட்!

வியாழன், 17 மார்ச் 2022 (16:54 IST)
நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ள படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியோடு வடிவேலு நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது பீஸ்ட் படத்தின் ரிலிஸ் வேலைகளில் பிஸியாக இருக்கும் நெல்சன் பீஸ்ட் ரிலிஸூக்குப் பின்னரே ரஜினி படத்தைத் தொடங்குவார் என சொல்லப்படுகிறது. மேலும் திரைக்கதையை செப்பனிடும் பணிகளுக்காக அவர் ரஜினியிடம் 5 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் இந்த படத்தில் நடிக்க உள்ள கதாநாயகிகள் பற்றிய தகவல்கள் பரவி வருகின்றன. படத்தில் பிரியங்கா மோகன் ரஜினியின் மகளாக நடிக்க அதிகவாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதுபோல ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் எந்திரன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்