வண்ணமயமான மகிழ்ச்சி நிலவட்டும்..! – பிரதமர் மோடி ஹோலி வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (08:33 IST)
நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி ஹோலி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

குளிர்காலம் முடிந்து வசந்தகாலம் தொடங்கும் சமயத்தை இந்து மதத்தினர் ஹோலி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக வண்ண பொடிகளை தூவி வாழ்வில் மகிழ்ச்சி நிலவ பிரார்த்திக்கின்றனர்.

இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பரஸ்பர அன்பு, சகோதரத்துவம் மற்றும் அனைத்து வண்ணத்திலான மகிழ்ச்சியையும் உங்கள் வாழ்வில் கொண்டுவரும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்