அமீரகத்தை பீதிக்கு உள்ளாக்கிய பறவை காய்ச்சல்; அரசு எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (08:37 IST)
உலகின் பல நாடுகளில் பறவை காய்ச்சல் நோய் அதிகரித்து வருவதால் வெளிநாடுகளிலிருந்து பறவைகள் இறக்குமதிக்கு அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.

இந்தியா, ரஷ்யா, ஓமன், நெதர்லாந்து உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அரபு அமீரகத்திற்கு பறவைகள், இறைச்சிகள், முட்டைகள் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபகாலமாக ரஷ்யா, ஓமன், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பலபகுதிகளில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது.

இதனால் இந்த நாடுகளில் இருந்து பறவைகள் மற்றும் பறவைகள் சார்ந்த இறைச்சி, முட்டை இதர பொருட்களை தடை செய்வதாக அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அரபு நாட்டு சந்தைகளில் மேற்கண்ட நாடுகளில் இருந்து வந்த பறவைகள் விற்பனை செய்யபடாமல் இருப்பதை கண்காணிக்கவும், முறைகேடான இறக்குமதியை தடுக்கவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்