6 கோடி மக்களின் நிலம் மூழ்கும்: பீதியை கிளப்பும் அமெரிக்கா!

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (15:32 IST)
துருவங்களில் இருக்கும் பனிச்சிகரங்கள் புவி வெப்பமயமாதலால் உருகுவதால் சீனாவில் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. 
 
இது குறித்து க்ளைமேட் சென்ட்ரல் என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் விஞ்ஞானிகள் பின்வருமாறு கூறியுள்ளனர். 
 
பருவநிலை மாறுபாடு காரணமாக புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடிக்குமானால், பல அபாயகரமான விளைவுகளை உலக மக்கள் சந்திக்க நேரிடும். 
 
குறிப்பாக, சீனாவின் ஹாங்காங், ஷாங்காய், டியான் ஜின் ஆகிய நகரங்கள் கடலில் மூழ்கும். இதனால், அங்கிருந்து 5 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற நேரிடும். அதேபோல், உலக அளவில் 6 கோடி பேர் வசித்து வரும் நிலங்களும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்