அந்த வகையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுமையாக நிறுத்தி கொள்ள வேண்டும், இல்லையெனில் தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தது.
இந்நிலையில், இந்த மாதத்தில் ஈரான் மீது அடுத்தக் கட்ட பொருளாதார தடையை அமெரிக்கா விதிக்க இருக்கிறது. இந்த பொருளாதார தடை அமெரிக்காவின் நாணய கொள்கை, எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவை மூலம் இந்தியா மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்கா, நவம்பர் மாதம் முதல் ஈரானின் எண்ணெய் விநியோகத்தின் மீது தடையை விதிக்க உள்ளது. இதன் விளைவாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை கவலையின்றி உயர்த்தும்.