தலிபான் தடையை மீறி சென்னை ஐஐடியில் எம்.டெக். படித்த ஆப்கானிஸ்தான் மாணவி..!

Webdunia
ஞாயிறு, 28 மே 2023 (11:05 IST)
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி வந்ததிலிருந்து பெண்கள் உயர்கல்வி படிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் சென்னை ஐஐடியில் ஆன்லைன் மூலம் எம்டெக் படித்த ஆப்கானிஸ்தான் மாணவி குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது 
 
ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவி பெகிஸ்தா என்பவருக்கு சென்னை ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் எம்டெக் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் தாலிபான்கள் தடை காரணமாக அவர் படிக்க முடியாத நிலை இருந்தது 
 
இந்த நிலையில் சென்னை ஐஐடி நிர்வாகத்துடன் பேசி ஆன்லைன் வாயிலாக மாணவிக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை அடுத்து மாணவி பெகிஸ்தா தனது வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து இரவு பகலாக படித்து தற்போது எம்டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் சென்னைக்கு நேரில் வந்து பட்டம் பெற விரும்புவதாகும் அவர் கூறியுள்ளார் 
 
இதனை அடுத்து அவர் பிஎச்டி படிக்க விரும்புவதாகவும் கூறி உள்ளார். ஆப்கானிஸ்தான் பெண்கள் வீட்டு சிறையில் இருந்தாலும் தடைகளை உடைத்து படிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றும் மாணவி பெகிஸ்தா கூறியுள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்