இந்த பெண்ணின் மனசு யாருக்கு வரும்!

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (13:13 IST)
லயலா என்ற அமெரிக்காவை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு மைக்ரோஸ்கோப் பாலியான்கிட்டிஸ் என்னும் நோய் தாக்கி இருந்தது. 


 
 
இதனால் அவரது சிறுநீரகம் செயலிழந்து 12 மணி நேரத்திற்கு ஒரு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டியது கட்டாயமானது.
 
அந்த சிறுமிக்கு வேறு சிறுநீரகம் பொருத்த வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று டாக்டர்கள் கூறினர். இது குறித்து நாடு முழுவதும் விளம்பரமும் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் லயாலா படித்த பள்ளியின் ஆசிரியை படிஸ்டா என்பவர் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்துள்ளார். இது குறித்து ஆசிரியை படிஸ்டா கூறியதாவது, “லயலா உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உடனே நான் மருத்துவரிடம் சென்று என்னை பரிசோதனை செய்து, எனது சிறுநீரகத்தை அவளுக்கு தானமாக கொடுத்தேன்.”என்றார்.
அடுத்த கட்டுரையில்