பாகிஸ்தானுடன் கிரிக்கெட் வேண்டாம்! சீறும் கங்குலி!

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (12:21 IST)
பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. 


 
 
இந்நிலையில், இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கூறியதாவது, “எல்லைதாண்டிய பயங்கரவாத சம்பவங்கள் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்ட வரலாறு உள்ளது.

இதுபோன்ற நிலையில் இருநாடுகள் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் குறித்து பேசுவது சிறப்பானதாக இருக்காது. இருநாடுகள் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருக்கிறது. அதேநேரம், எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தாத வரையில் இருநாடுகள் இடையே கிரிக்கெட் போட்டிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை.” என்றார்.
அடுத்த கட்டுரையில்