ஒற்றைக் காலுடன் காதலியிடம் காதலைச் சொன்ன ராணுவ வீரர் !

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (13:06 IST)
உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர்  ஒற்றைக் காலுடன் காதலியிடம் காதல்  சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வ்ருகிறது.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா, சிறிய நாடானன உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. இந்தப் போர் 7 மாதங்களுக்கு மேலாக நீடிஹ்ட்து வருகின்றது.

சமீபத்தில், உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியதாக அதிபர் புதின் அறிவித்தார். இந்த நிலையில்,  உக்ரைன் ராணுவ வீரர் ரோமன் டோப்ரியாக் என்பவர் இப்போரில் தன்  ஒரு காலை இழந்துள்ளார்.

ALSO READ: ஜெனிவா உடன்படிக்கையை மீறிய ரஷ்யா. மேற்கு உலக நாடுகள் கண்டனம்

இந்த நிலையில், தன் காதலியிடம் ரோமன் டோப்ரியாக் காதலைக் கூறவே   உற்றார், உறவினர்கள், குடும்பத்தினர் முன்னிலையிலும் கூறவே, அதை காதலி ஏற்றுக் கொண்டார். காலை இழந்தாலும் காதலை இழக்கவில்லை எந்று நெட்டிசன்கள் இவர்களின் உண்மைக் காதலை பாராட்டி வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்