திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (12:06 IST)
திராவிட மாடல் ஆட்சியோ திமுகவோ ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசியுள்ளார் 
 
இன்று வள்ளலார் அவர்களின் முப்பெருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியபோது வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும்கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது என்றும் திமுக அல்லது திராவிட மாடல் ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல என்றும் பேசினார்
 
மேலும் ஆன்மீகத்தை அரசியலுக்கும் சுயநலத்திற்கு பயன்படுத்துவதற்கு எதிராக தான் திமுக குரல் கொடுக்கும் என்றும் அவர் கூறினார். இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில் 200 இலச்சினை மற்றும் தபால் உறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்