குட்டை பாவடையுடன் வீடியோ வெளியிட்ட மாடல் அழகி: கைது உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள்

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (12:35 IST)
சவுதி அரேபியாவில் குலூத் என்ற மாடல் அழகி குட்டை பாவடை அணிந்து வீடியோவை வெளியிட்டதால் சவுதி அதிகாரிகள் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளனர். 


 

 
சவுதி அரேபியாவின் உஸ்கைஜர் என்ற கிராமத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையில் குலூத் என்ற மாடல் அழகி குட்டை பாவடையில் நடக்கும் வீடியோ ஒன்றை ஸ்நாப்சாட்டில் வெளியிட்டார்.
 
இந்த வீடியோவை பார்த்த சவுதி அதிகாரிகள் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடக செய்திகளில் வெளியாகியுள்ளது. சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி சவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சவுதி அரேபியாவில் பெண்களுக்கான ஆடை கட்டுபாடு கடுமையாக இருக்கும். பெண்கள் தங்கள் முகம் முதல் கால் வரை உடலை மறைக்கும் புர்கா என்ற சொல்லக்கூடிய ஆடையை அணிந்துக் கொண்டுதான் பொதுவெளியில் செல்வார்கள். அரபு நாட்டின் மரபை மீறி அந்த மாடல் அழகி செயல்பட்டுள்ளதாக பலரும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர். 
 
இந்த வீடியோவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் அந்த மாடல் அழகியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர். 
அடுத்த கட்டுரையில்