டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு! கொலை செய்ய முயன்ற மர்ம நபர் யார்?

Siva
திங்கள், 16 செப்டம்பர் 2024 (06:47 IST)
அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் அவர்களை ஏற்கனவே ஒரு முறை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சி நடந்த நிலையில் தற்போது மீண்டும் துப்பாக்கியால் அவர் மீது சுட முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் டிரம்ப் அவர்களுக்கு சொந்தமான கோல்ப் மைதானத்தில் அவர் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் டிரம்ப்பை நோக்கி சுட்டதாகவும் ஆனால் குறி தவறியதால் நூலிழையில் அவர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து உடனடியாக டிரம்ப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியா என்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்ப் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பதும் அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவரை கொலை செய்ய துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்