24 மணி நேரத்தில் 104 பேருக்கு குரங்கம்மை: இங்கிலாந்து அரசு அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (08:29 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் இருந்து வந்ததை அடுத்து தற்போது தான் பொதுமக்கள் கொரோனா நோய் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து குரங்கு அம்மை பாதிப்பு பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
பல நாடுகளில் குரங்கு அம்மை மிக வேகமாக பரவி வருகிறது என்றும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் அதிகமாக பரவி வருகிறது என்றும் கூறப்படுகிறது 
 
இஎத நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்து நாட்டில் 104 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இங்கிலாந்து நாட்டில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 470 ஆக அதிகரித்துள்ளது என்றும் இங்கிலாந்து அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்