அவர் மறைந்து ஒரு ஆண்டுக்கும் மேலானாலும், அவ்வப்போது அவர் பற்றிய நினைவுகளைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி அவரின் 75 ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு மிகப்பிரம்மாண்டமான கச்சேரி ஒன்று நடத்தப்பட்டது. அதில் இளையராஜா, ஜானகி, பி சுசீலா, தேவா, ரஹ்மான், வைரமுத்து உள்ளிட்ட தமிழின் பல முன்னணி இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டனர்.