அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அதிகம் இருக்கும் நிலையில் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 64,420 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,478,415 எனவும், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,38,234 எனவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் 1,549,072 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.
உலகம் முழுக்க கொரோனா காரணமாக 13,228,323 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர் என்றும், கொரோனா காரணமாக உலகம் முழுக்க 574,962 பேர் பலியாகியுள்ளனர் என்றும், இதுவரை 7,691,015 பேர் உலகம் முழுக்க கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28179 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை நெருங்குகிறது என்பதும் அதாவது இதுவரை இந்தியாவில் 9,07,645 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 23727 பேர் பலியாகி உள்ளனர்
மேலும் இந்தியாவில் இதுவரை 572112 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர் என்பதும், இந்தியாவில் மொத்தமாக 311806 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது