சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்.. ஆனால் செங்கோட்டையன் உள்ளே..

Mahendran

திங்கள், 7 ஏப்ரல் 2025 (13:26 IST)
சட்டசபையில் இருந்து இன்று அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், செங்கோட்டையன் சட்டசபையில் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
"அந்த தியாகி யார்?" என்ற வாசகம் பொருத்தப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள், இன்று சட்டசபை நடவடிக்கையின் போது அமளியில் ஈடுபட்டு பதாகைகள் காட்டியதால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
 
ஆனால், அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் பேட்ஜ் அணிந்து வரவில்லை என்பதால், அவரை காவலர்கள் வெளியேற்றவில்லை. மற்ற அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில், செங்கோட்டையன் மட்டும் அவைக்குள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் செங்கோட்டையனுக்கு அவைத் தலைவர் அப்பாவு பேச அனுமதி வழங்கினார். கோபியில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக செங்கோட்டையன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவரது கருத்தை ஏற்று, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு இது தொடர்பான தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளிக்கப்பட்டது.
 
எடப்பாடி பழனிசாமி உட்பட அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் வெளியேற்றப்பட்ட நிலையில், செங்கோட்டையன் மட்டும் உள்ளே இருந்ததால், "இன்னும் அதிமுகவுக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே இருக்கும் மனக்கசப்பு தீரவில்லை" என்று கூறப்படுகின்றது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்