சீனாவை விட்டு வெளியேற Tik Tok நிறுவனம் திட்டம்

திங்கள், 13 ஜூலை 2020 (18:41 IST)
இந்தியா – சீனா இடையே எல்லைப் பகுதியில் நடைபெற்ற பிரச்சனையில் விளைவாக இந்தியாவில் சீனா செயலிகளுக்குத் தடைவிதிக்கபட்டது. சுமார் 59 செயலிகளுக்கு  மத்திய அரசு தடை செய்தது.

இந்தியாவை அடுத்து, சீனா செயலிகளுக்கு தடை விதிக்க ஆலோசித்து வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்  டிக்டாக் நிறுவனம் தனது தலைமையகத்தை சீனாவில் இருந்து வேறு நாட்டுக்கு இடம் மாற்றி விடலாம் என ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது. குறிப்பாக டிக்டாக் நிறுவனத்தில் தாய் நிறுவனமாக ByteDance நிறுவனம் சீனாவுடனான தனது தொடர்பைத் துண்டிக்க முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்த  ByteDance நிறுவனத்திற்கு  ஏற்கனவே லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ்,  நியூயார்க் டப்லின் , இந்தியாவின் மும்மை ஆகிய இடங்களில் தலைமையகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்