உலகளவில் 55.84 லட்சமாக உயர்ந்த கொரோனா பாதிப்பு: இந்தியாவில் எவ்வளவு?

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (08:20 IST)
உலக அளவில் தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55,84,211ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,61,092ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,47,614ஆக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
உலகிலேயே மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 17,06,226ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99,805ஆக உயர்ந்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது அந்நாட்டினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 376,669 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் 353,427பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் 282,480 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 261,184 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 230,158பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸில் 182,942பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெர்மனியில் 180,789பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், துருக்கியில் 157,814பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் 144,950 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,172 கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்