கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்ட ஊரடங்கும் முடிவடைந்து நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,021 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 57,721 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனாவுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகா கொரோனாவுக்கு தற்போது 1,431 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.